#BIG NEWS : இந்த ஆண்டு முதல் + 1 பொதுத்தேர்வு ரத்து - புதிய கல்விக் கொள்கையில் வெளியீடு..!
நாடு முழுதும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை செயல்படுத்தும் வகையில், புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது மத்திய அரசு.அதை, தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதற்கு மாற்றாக, மாநில அரசே தனி கல்விக் கொள்கையை வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி டி.முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கொள்கை உருவாக்கப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்துள்ளது.அந்த கொள்கை எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், திருத்தப்பட்ட மாநில கல்விக் கொள்கையை, முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார் இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
எக்காரணம் கொண்டும் யாரும் கல்வியை பாதியில் கைவிடக்கூடாது. அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம் . பள்ளிக் கல்வி வரலாற்றில் இது சிறப்பு விழா.பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் பார்த்தால் புது எனர்ஜி வந்து விடுகிறது. இந்த ஆண்டு 75% மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் இது 100 சதவீதமாக உயர வேண்டும்.
காடு எதுவாக இருந்தாலும், சிங்கம் தான் அங்கு ராஜா. அதுமாதிரி எளிய பின்னணியில் இருந்து முயற்சியால் பெரிய உயரத்திற்கு வந்திருக்கும் நீங்கள் தான் ரியல் ஹீரோ. தமிழகத்திற்கு என்று தனி சிந்தனை உள்ளது சிந்தித்து செயல்படும் வகையில் கல்வி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி கொள்கை மூலமாக படித்து மனப்பாடம் செய்யும் மாணவர்களை உருவாக்குவதை விட, சிந்தித்து கேள்வி கேட்கும் மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம்.படிக்கிறவர்களாக மட்டும் அல்ல; படைப்பாற்றல் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம்.
தாய்மொழி தமிழ் நமது அடையாளமாக, பெருமிதமாக இருக்க வேண்டும். முக்கியமாக தமிழும், ஆங்கிலமும் எங்களது இருமொழிக் கொள்ளை தான் உறுதியான கொள்கையாக இருக்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன், இருமொழிக் கொள்கை தான், நம்முடையான உறுதியான கொள்கை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
புதிய கல்விக்கொள்கையின்படி, 11ம் வகுப்புக்கான அரசு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. நடப்பாண்டு முதலே இது அமலுக்கு வர உள்ளது. எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சியும் தொடரும். இனி மேல் 10 மற்றும் 12ம் வகுப்புக்கு மட்டுமே அரசு தேர்வு நடத்தப்படும்.
.png)