#BIG NEWS: திருப்பதி லட்டு கவுண்டரில் தீ விபத்து.. பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்..!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவில் மிகவும் சிறப்பு பெற்றது. திருப்பதியில் தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். இதனால் திருப்பதியில் எப்போதும் கூட்டம் அலைமோதும். இங்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கும் அறையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
லட்டு விநியோகம் செய்யும் வளாகத்தில் உள்ள 47- ம் நம்பர் கவுன்ட்டரில் யு.பி.எஸ்-ல் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து.
#JUSTIN திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விநியோக மையத்தில் தீ விபத்து#Tirupati #Temple #FireAccident #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/RTFqSYHDmH
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 13, 2025