1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : விவசாயிகளின் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவிப்பு..!

1

டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்திய பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படக் கூடிய டாக்டர் எம்.எஸ் சுவாமிநாதன் கடந்தாண்டு இயற்கை எய்தினார்.

மேலும் மறைந்த முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், சவுத்ரி சரண்சிங் மற்றும் வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வராகவும் இருந்த நரசிம்ம ராவ் இந்தியாவின் தொழில் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 1991 முதல் 1996 வரை பிரதமராக இருந்த நரசிம்ம ராவ், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலை முன்னறிவித்த நபராக அறியப்படுகிறார். ஒரு சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும், நரசிம்ம ராவ் பல்வேறு பதவிகளில் இந்தியாவுக்குச் சேவை செய்துள்ளார். அவருக்கு இந்த விருது அளிக்கப்படுவதில் பெருமை கொள்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like