#BIG NEWS : ரசிகர்கள் அதிர்ச்சி..! சிறையில் அடைக்கப்படும் அல்லு அர்ஜுன்..
நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் புஷ்பா. இந்த திரைப்படத்தின் 2ம் பாடம் புஷ்பா 2. இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
முன்னதாக 'புஷ்பா 2' படத்தின் பிரீமியர் காட்சி திரைப்படம் ரிலீசாவதற்கு ஒரு நாள் முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் வெளியிடப்பட்டது. இந்த காட்சியை நடிகர் அல்லு அர்ஜுன் பார்க்க சென்றார். அப்போது அவரை பார்க்க ஏராளமானவர்கள் கூடினர்.
ரசிகர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு அல்லு அர்ஜுனை பார்க்க முயன்றனர். இதனால் திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் 35 வயது நிரம்பிய ரேவதி என்ற பெண் இறந்தார். ரேவதியின் மகன் உள்பட மேலும் சிலர் காயமடைந்தனர். இதுதொடர்பாக தியேட்டர் உரிமையாளர், மேனேஜர், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சத்தை இழப்பீடாக அறிவித்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுன் நீதிமன்றத்தை நாடி உள்ளார். அந்த மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. இந்நிலையில் தான் நடிகர் அல்லு அர்ஜுனை இன்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அல்லு அர்ஜுனின் வீட்டுக்குள் நுழைந்து போலீசார் கைது செய்தனர்.
நடிகர் அல்லு அர்ஜுன் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கே நடைபெற்ற வழக்கின் முடிவில் நீதிபதிகள் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அல்லு அர்ஜுனை சிறை வைக்க உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.