1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : 6 மாதம் கழித்து கூட்டணி பேச்சுவார்த்தை - இபிஎஸ்...பாஜக கூட்டணிக்கு தயாராகிவிட்டதா அதிமுக?

1

அண்ணா​மலைக்கும் அதிமுக-வுக்கும் இடையில் நடந்த வார்த்தை வீச்சு​களின் காரணமாக, 2024-ல் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது. மோடி, அமித் ஷா அழைத்துப் பேசிய பிறகும் கூட்டணி முறிவை மறுபரிசீலனை செய்ய மறுத்​து​விட்டார் இபிஎஸ். இந்த நிலையில் தான், மார்ச் 3-ம் தேதி கோவையில் நடைபெற்ற எஸ்.பி.வேலுமணி மகன் திருமணத்தில் கே.ஏ.செங்​கோட்​டையன், பி.தங்கமணி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்​சர்​களுடன் வழக்கத்தை விட நெருக்​கத்தைக் காட்டி பேசினார் அண்ணாமலை.

வேலுமணி​யும், இது அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டு திருமணமா பாஜக முன்னாள் அமைச்சர் வீட்டு திருமணமா என்று வியக்​குமளவுக்கு பாஜக தலைவர்​களின் கூட்டத்தையே கூட்டி இருந்​தார். தேவையற்ற சங்கடங்களை தவிர்ப்​ப​தற்காக இந்த விழாவில் இபிஎஸ் பங்கேற்​க​வில்லை. ஆனபோதும், அவரது மனைவியும் மகனும் கலந்து கொண்டனர்.


தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக நிர்வாகிகள் இடையிலான நெருக்கம் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், பாஜக கட்சி நோட்டா கட்சி.. தீண்டத்தகாத கட்சி.. பாஜக வந்ததால் தான் நாங்கள் தோற்றோம் என்று பேசினார்கள். ஆனால் இன்று பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கி இருக்கிறோம். நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது என்று பேசியிருந்தார்.


இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டில் மகளிருக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களை கண்டித்து அதிமுக தரப்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

பாஜகவால் தோற்றோம் என்றவர்கள் பாஜக கூட்டணிக்காக தவம் கிடப்பதாக அண்ணாமலை பேசியது குறித்து, சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், "அதிமுகவை அவர் (அண்ணாமலை) குறிப்பிட்டுச் சொன்னாரா? தவறா சொல்லாதீங்க. நீங்களா ஏதாவத பேசாதீங்க.   6 மாதங்களுக்கு பின் கூட்டணி குறித்து பேசப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like