1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு : வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்..!

Q

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 இந்நிலையில் அருணாச்சல் மற்றும் சிக்கிமில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் மட்டும் ஜூன் 4ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ஆம் தேதியே எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 2 சட்டமன்றங்களின் பதவிக்காலம் ஜூன் 2ஆம் தேதி நிறைவடைவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like