#BIG NEWS : இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையம் முடிவெடுக்க இடைக்கால தடை!
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நான்கு வாரங்களில் முடிவெடுக்கப்படும் என்று கடந்த விசாரணையின் போது தேர்தல் ஆணையம் உறுதி அளித்திருந்தது. இந்நிலையில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில்தான் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது
அது மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவுக்கு ஜனவரி 27ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.