1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : தலைநகரில் நிலநடுக்கம்... 3 நாட்களில் 2வது முறை...!

1

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சற்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மூன்று நாட்களில் 2வது முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது லேசான நில அதிர்வாக பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

நிலநடுக்கம் உணரப்பட்டதும் பலரும் தங்களது வீடுகள், அலுவலகங்களில் இருந்து வெளியே ஓடி வந்தனர். 

இந்த நிலநடுக்கத்தின் பின்னணி குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதாவது, நேபாளம் நாட்டில் இன்று பிற்பகல் 4.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியானது உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து வடக்கே 233 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இதன் பாதிப்பு அருகிலுள்ள இந்தியப் பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. எனவே தான் டெல்லியும் ஆட்டம் கண்டிருக்கிறது. 

Trending News

Latest News

You May Like