1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : அதிமுக கூட்டணியில் இணைகிறது தேமுதிக..?

1

தேமுதிக-வின் தலைவரான மறைந்த விஜயகாந்திற்கு தமிழ்நாட்டில் தனி செல்வாக்கு உள்ளது. அந்த செல்வாக்கு தற்போது வரை தேமுதிக-வின் வாக்குகளாக உள்ளது. தற்போது சரிவு பாதையில் தேமுதிக இருந்தாலும் அவர்களை கூட்டணிக்கு முன்னணி கட்சிகள் அழைத்து வருகின்றனர்.

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி பிரேமலதாவைச் சந்தித்தார். தேமுதிக தங்கள் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று அதிமுக தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. மறுமுனையில் தேமுதிக-வை தங்களது கூட்டணியில் கொண்டு வர தவெக-வும், திமுக-வும் முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேசி வீரமணியுடனான சந்திப்பின்போது பிரேமலதா அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக வர வேண்டும் என்றால் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், சற்றுமுன் தேமுதிக பொருளாளர் எல்கே.சுதீஷ் தனது இன்ஸ்டாவில், ஜெயலலிதாவுடன் பிரேமலதா இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டதை அவர் கூறுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like