#BIG NEWS : சட்டமன்ற தேர்தலுக்கு முன் ராஜ்யசபா MP-ஐ பெறும் தேமுதிக..?

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதை முன்னிட்டு, வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவிற்கு நான்கு உறுப்பினர்களும், அதிமுகவிற்கு 2 உறுப்பினர்களும் கிடைப்பார். திமுக ஏற்கனவே மூன்று உறுப்பினர்களையும், கூட்டனியில் உள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு பதவியையும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தான், அதிமுகவும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான இன்பதுரையும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். அதிமுக கூட்டணிக்கு 70 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், அவர்களின் வேட்பாளர்கள் சிக்கலின்றி வெற்றி பெறுவார்கள் என கூறப்படுகிறது.
தேமுதிகவிற்கு வரும் 2026-ஆம் ஆண்டு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்றும் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தேமுதிகவுக்கு 2026 ராஜ்யசபா தேர்தலில் ஒரு சீட் ஒதுக்கியுள்ளது AIADMK. ஏப்ரல், 2026ல் தம்பிதுரை, G.K வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிகிறது. பிப்ரவரி அல்லது மார்ச்-ல் தேர்தல் நடைபெறும். இதன்மூலம், சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஒரு ராஜ்யசபா MP-ஐ DMDK பெறுகிறது.