1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : ஜப்பான் நிலநடுக்கத்தில் மகனுடன் சிக்கிய பிரபல இயக்குனர் ராஜமௌலி...!

Q

டோக்கியோ, ‘ரிங்க் ஆப் பயர்’ எனப்படும் புவி தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும்.
இந்நிலையில் ஜப்பானின் கிழக்கில் உள்ள இபராக்கி மாகாணம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (ஜே.எம்.ஏ.) தெரிவித்துள்ளது.
ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இதனைத்தொடர்ந்து மத்திய டோக்கியோவிலும் நிலநடுக்கம் பெரும்பாலும் உணரப்பட்டது.
நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 9:08 மணிக்கு தெற்கு இபராக்கி மாகாணத்தில் சுமார் 50 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. ஜப்பானின் நில அதிர்வு தீவிரம் அளவுகோலில் குறைந்த 5 அளவைக் கொண்டது, இது ஏழு மணிக்கு உச்சத்தை எட்டுகிறது என்று வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எஸ்.எஸ்.ராஜமௌலி, அவரது மகன் கார்த்திகேயா மற்றும் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா ஆகியோர் 2022 -ம் ஆண்டு வெளியான RRR படத்தின் சிறப்புத் திரையிடலுக்காக ஜப்பானில் சென்று இருக்கின்றனர்.
இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் கார்த்திகேயா, “ஜப்பானில் தற்போது பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தரை மெதுவாக நகர ஆரம்பித்து நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது என்பதை உணரவே எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது. 
நான் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த போது, சுற்றியிருந்த ஜப்பானியர்கள் ஏதோ மழை பெய்ய தொடங்கியது போல அசையாமல் இருந்தனர்.” என்று பதிவிட்டு இருந்தார். 
அத்துடன் ஜப்பானிய வானிலை ஆராய்ச்சி மையத்தில் இருந்து வந்த எச்சரிக்கை செய்தி தொடர்பான போட்டோவையும் அவர் பகிர்ந்து இருக்கிறார். 


 


 

Trending News

Latest News

You May Like