#BIG NEWS : துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு..!
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென அப்பதவியில் இருந்து விலகினார். இதனால், வரும் 9-ம் தேதி அப்பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், NDA கூட்டணி சார்பில், மகாராஷ்டிரா கவர்னராக உள்ள ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார்.
உடல்நிலையை காரணம் காட்டி, துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வும் செய்யும் தேர்தல் செப். 9ம் தேதி நடக்க இருக்கிறது.
இந்த தேர்தலில் பார்லிமென்டின் இரு அவைகளின் (லோக் சபா, ராஜ்ய சபா) எம்பிக்கள் (782 பேர்), துணை ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர். வேட்பாளராக போட்டியிடுபவர் ஓட்டளிக்க முடியாது.
தேர்தலில் பாஜ கூட்டணி தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து பாஜ பார்லிமென்ட் குழு கூட்டம் டில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஆக.17) நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தேசிய தலைவர் நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்திற்கு பிறகு, தேஜ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என பாஜ தலைவர் நட்டா அறிவித்தார்.
துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பிறகு நட்டா கூறியதாவது: எதிர்க்கட்சிகளுடனும் பேசுவோம். துணை ஜனாதிபதிக்கு நடக்கும் தேர்தலில் போட்டியின்றி வேட்பாளர் தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்ய எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெறுவோம் என்றார்.
.png)