#BIG NEWS : பொக்கை வாய் சிரிப்பால் மனதை கவர்ந்த குமரி வேலம்மாள் பாட்டி உயிரிழப்பு- முதல்வர் இரங்கல்..!
தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு, 2000 ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு மலர்ந்த முகத்துடன் சென்ற வேலம்மாள் என்னும் பாட்டியை குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜாக்சன் ஹெர்பி என்பவர் எடுத்த புகைப்படம் வைரல் ஆனது.அந்த புகைப்படத்தின் மூலம் தமிழக அரசின் சாதனை விளம்பர போஸ்டர்களில் மீண்டும், மீண்டும் இடம்பிடித்து வந்தார் வேலம்மாள் பாட்டி. அவருக்கு திமுக அரசு சார்பில் வீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தன் முகம் ததும்பிய புன்னகையால் வைரலான வேலம்மாள்பாட்டி நேற்று (ஜூலை 27) இரவு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் செய்தியறிந்து வருத்தமுற்றேன். கொரோனா பேரிடர் கால நிவாரணமாகக் கழக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்ற போது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
"கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். கொரோனா பேரிடர் கால நிவாரணமாகக் கழக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்ற போது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார். அவரது… pic.twitter.com/lBBmdnOc2O
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 28, 2023