#BIG NEWS : சிறுவர்களுக்கு செக்..! இனி ஆன்லைனில் பணம் கட்டி விளையாட கட்டுப்பாடு..!

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிகளை கேமிங் ஆணையம் கடுமையாக்கி உள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் தலைமையில் ஆன்லைன் கேமிங் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பணம் கட்டி ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கேற்க ஆன்லைன் கேமிங் ஆணையம் தடை விதித்துள்ளது.
* பணம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளில் உள்நுழைவுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைனில் பணம் கட்டும் விளையாட்டுகளில் பயனர்களை அனுமதிக்கக்கூடாது.
* ஒரு மணி நேரத்திற்கு மேலாக விளையாடும்போது 30 நிமிட இடைவெளியில் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.