#BIG NEWS : சார்லி சாப்ளின் மகள் காலமானார்..!
மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினின் 3-வது குழந்தையாக கலிபோர்னியா மாகாணத்தின் சான்டா மோனிகா நகரில் பிறந்தவர் ஜோசபின் சாப்ளின்.
இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி வயது மூப்பின் காரணமாக காலமானர். இதனை அவரது குடும்பத்தினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 1949-ம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் சாப்ளின் - ஊனில் தம்பதிக்கு மூன்றாவது மகளாக பிறந்த இவர், சாப்ளின் இயக்கி, தயாரித்து நடித்த 'லைம்லைட்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து, 'தி காண்டர்பரி டேல்ஸ்', 'ஓடிர் தி பேவரிட்ஸ்' உள்ளிட்ட படங்களில் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார். இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சார்லி, ஆர்தர் மற்றும் ஜூலியன் ரோனட் என 3 மகன்கள் உள்ளனர். இவரது இறுதி சடங்கில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.