#BIG NEWS : நாடு முழுவதும் இடைத்தேர்தல் தேதி மாற்றம்..!
உ.பி.,யில் ஒன்பது, பஞ்சாபில் நான்கு, கேரளாவில் ஒன்று என மொத்தம் 14 சட்டசபை தொகுதிகளுக்கு நவ., 13ல் இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ஆனால், அந்த நாளில், திருவிழா மற்றும் கலாசார நிகழ்வுகள் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், பண்டிகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த மாற்றத்தை செய்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 13 ஆம் தேதிக்கு பதிலாக 20 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே சமயம் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.