1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : அடுக்குமாடி குடியிருப்பவர்களுக்கு அதிர்ச்சி..! பதிவு கட்டணம் 2 மடங்காக அதிகரிப்பு..!

1

ல் தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை உயர வாய்ப்புள்ளது. உதாரணத்துக்கு ரூ.50 லட்சத்துக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும் நிலையில் விற்பனை பத்திரத்துக்காக நிர்ணயிக்கப்படும் கட்டணத்தில் 9 சதவீதம் மற்றும் கட்டுமான கட்டணமாக 4 சதவீதம் என தோராயமாக ரூ.2.35 லட்சம் செலுத்தினால் போதுமானதாக இருந்தது.

தமிழக அரசின் புதிய உத்தரவின்படி அடுக்குமாடி குடியிருப்பின் மொத்த விலையில் 9 சதவீத தனிப்பதிவு கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது ரூ.50லட்சம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புக்கு 4.5 லட்சம் அளவுக்கு தனி பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சரியான முறையில் கட்டணத்தை வசூலிக்கவும், முறைகேட்டை தடுக்கவும் இத்தகைய தனிப்பதிவுக் கட்டணம் விதிக்கப்படுவதாக வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்த விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைத்து சார் பதிவாளர்களுக்கு வழங்குமாறு பத்திரப்பதிவு துறை தலைவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
 

Trending News

Latest News

You May Like