1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : பட்ஜெட்டால் விலை குறையும் பொருட்கள்..!

1

  • வரி குறைப்பால் தோல் பொருட்கள் விலை குறைகிறது.தோல் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைக்கப்படும் 
  • இ-காமர்ஸ் ஆப்பரேட்டர்களுக்கு TDS 1 சதவிகிதத்திலிருந்து 0.1 சதவிகிதமாகக் குறைப்பு.
  • தங்கம், வெள்ளி நகைகளுக்கு சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6% குறைக்கப்படுவதாகவும், பிளாட்டினம் நகைகளுக்கு சுங்க வரி 6.4% குறைக்கப்படுவதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.இதனால் தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • செல்போன்களின் விலை குறைகிறது. செல்போன் மற்றும் உதிரி பாகங்களின் இறக்குமதி வரி 15 சதவிகிதம் குறைக்கப்படும்.
  • நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 4.9 சதவிகிதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இடைக்கால பட்ஜெட்டில் 5.1 சதவிகிதமாக மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது 0.2 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
  • அறக்கட்டளைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது
  • 3 வகை புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்கவரியில் இருந்து விலக்கு.
  • 25 தாது பொருட்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு.விண்வெளி பாதுகாப்பு தொலைத்தொடருகளில் 25 முக்கிய தாது பொருட்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு 
  • சூரிய ஒளி மின்சாரத்திற்கு பயன்படும் கருவிகளுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது 
  • மருத்துவ உபகரணங்களுக்கு சுங்க வரி குறைப்பு 
  • பிளாஸ்டிக் பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்வு 
  • பத்திரப் பதிவு கட்டணங்களை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்.அதிக பத்திரப் பதிவு கட்டணங்கள் வசூலிக்கும் மாநிலங்கள் கட்டணங்களைக் குறைப்பதற்கு ஊக்குவிக்கப்படும். மேலும் பெண்கள் வாங்கும் சொத்துகளூக்குக் கூடுதல் கட்டணக் குறைப்பு திட்டங்களும் வகுக்கப்படும்.
  • சிறு குறு நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்க உத்தரவாதம் இல்ல கடன் வழங்கப்படும் 
  • வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 25% ஆகக் குறைப்பு
  • தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு ரூ.75,000-ஆக அதிகரிப்பு.
  • ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கான 'ஏஞ்சல் வரி' ரத்து.
  • அன்னிய நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 35%ஆக குறைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
  • மேலும் பெண்கள் பெயரில் நிலம் பதிவு செய்யப்படும் போது முத்திரைத் தீர்வையை குறைக்க பரீசீலனை செய்யப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like