1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS: பள்ளியில் பட்டாசு வெடித்த சிறுவன் : விரல் துண்டான சம்பவம்!

1

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பள்ளியில் பட்டாசு வெடித்த சிறுவனின் விரல் துண்டான சம்பவம் அரங்கேறியுள்ளது.

நெடியம் கிராமத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு படிக்கின்றனர்.

அரசு தேர்வு நடைபெறுவதை ஒட்டி இவர்களுக்குச் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்ட நிலையில், அபினேஷ் என்ற மாணவர் பள்ளிக்குப் பட்டாசு எடுத்துவந்துள்ளார். தொடர்ந்து கையில் வைத்து பட்டாசை அவர் வெடித்தபோது வலது கையில் இருந்து ஒரு விரல் துண்டானது.


மற்ற  4 விரல்களிலும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like