1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரிணி உடல்..!

Q

பின்னணி பாடகியுமான பவதாரணி புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 47. பவதாரணி உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட்டு இறுதி சடங்கு நடைபெற உள்ளது.
பவதாரணியின் மறைவுக்கு திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த பாடகி பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. அங்கு விமான நிலைய நடைமுறைகள் முடிந்த பின், பவதாரிணியின் மூத்த சகோதரர் கார்த்திக் ராஜாவிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில், தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் அவரது உடல் இன்றிரவு வரை வைக்கப்பட உள்ளது.

Trending News

Latest News

You May Like