#BIG NEWS: தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்டர்..!

விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள எம். புதூர், ஆணையம்பேட்டை, பெரியப்பட்டு ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் பைக்குகளில் வந்த மர்மநபர்கள், லாரி ஓட்டுநர்களை வழிமறித்து தாக்கிய பின்னர், அவர்களிடம் இருந்த பணம், செல்போன்களை பறித்ததோடு, ஜி-பே பாஸ்வேர்டையும் வாங்கி பணத்தையும் திருடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொள்ளையர்களை விரைவில் பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிரமாக வந்த நிலையில், வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய புதுச்சேரி பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் தற்போது போலீசாரின் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது.