#BIG NEWS : தமிழக பா.ஜ., தலைவர் தேர்தலில் அண்ணாமலை, நயினார் போட்டியிட முடியாது!

பாஜக மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட கட்சியில் 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இருவரும் பாஜகவில் உறுப்பினராகி 10 ஆண்டுகள் நிறைவடையவில்லை. அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து 8 ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில், நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
பா.ஜ., மாநில துணைத்தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான சக்கரவர்த்தி வெளியிட்ட அறிக்கையில்,
மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது பத்து ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். இவரை கட்சியில் தேர்வு செய்யப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேரின் பரிந்துரைக்க வேண்டும்.