1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : ஆந்திரா ரயில் விபத்து : உதவி எண்கள் அறிவிப்பு..!

1

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசாவில் உள்ள ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலும், பாலசா எக்ஸ்பிரஸ் ரயிலும் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் விபத்தில் சிக்கின.இதில் ரயில்களின் பெட்டிகள் தடம் புரண்டன. மொத்தம் 3 பெட்டிகள் தடம் புரண்டுள்ள நிலையில் அதில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர்.

தடம் புரண்ட பெட்டியில் காயமடைந்து இருந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது சில பயணிகள் படுகாயம் அடைந்து இருந்தனர். முதலில் 3 பயணிகள் பலியாகி இருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை என்பது 10 ஆக அதிகரித்துள்ளது.

ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார் 

இந்நிலையில் அவசர உதவி எண்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது..

 

null



 

Trending News

Latest News

You May Like