#BIG NEWS : மதுரை மாநகராட்சி அனைத்து மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்ய உத்தரவு..!
மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் பதவி விலகும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் மூர்த்தி இடையே நிலவும் கோஷ்டி பூசலால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, தேவைப்பட்டால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.