1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS: ஏர்டெல் நெட்வொர்க் சேவை திடீர் பாதிப்பு.. பொதுமக்கள் கடும் அவதி..!

Q

இந்தியா முழுவதும் தொலைதொடர்பு சேவை வழங்கி வரும் ஏர்டெல் நிறுவனம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை வைத்திருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஏராளமான வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் நிலையில் திடீரென ஏர்டெல் நெட்வொர்க் பாதிக்கப்பட்டதாகவும் இதனால் போன் பேச முடியாமல், இன்டர்நெட் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

சென்னை உள்பட சில இடங்களில் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து அழைக்கமுடியவில்லை என இணையதளங்களில் நுகர்வோர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

 

ஆனால், இதற்கான காரணமோ, அதற்கான தீர்வு குறித்தோ ஏர்டெல் தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.

Trending News

Latest News

You May Like