1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : 2026 ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க.,வுக்கு ஒரு சீட்டு உறுதி - அதிமுக ..!

Q

தமிழகத்தில் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.தி.மு.க., சார்பில் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரும், ம.நீ.ம., சார்பில் கமலும் போட்டியிட உள்ளனர். மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு, அ.தி.மு.க., சார்பில் இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.

ராஜ்யசபா தேர்தலுக்கு அ.தி.மு.க., சார்பில், வேட்பாளராக கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அவைத்தலைவர் தனபால் அறிவிக்கப்பட்டுள்ளனர். ராஜ்யசபா தேர்தலுக்கான, அ.தி.மு.க., வேட்பாளர்களை துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி அறிவித்தார்.

தற்போது தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சீட்டு கொடுக்கவில்லை. இது குறித்து கே பி முனுசாமி கூறியதாவது: தே.மு.தி.க.,வுக்கு தற்போது ராஜ்யசபா சீட்டு இல்லை. 2026ம் ஆண்டு தேர்தலில் தான் ராஜ்யசபா சீட்டு ஒதுக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். 2026ல் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க.,வுக்கு ஒரு சீட்டு ஒதுக்கப்படும். அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., தொடர்கிறது, என்றார்.

Trending News

Latest News

You May Like