#BIG NEWS : பிரபல நடிகை லட்சுமி மேனன் கைதாக வாய்ப்பு..?
தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தான் லட்சுமி மேனன்.
இவர் கொச்சியில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். பாரில் நடந்த தகராறை தொடர்ந்து ஊழியரை கடத்தியுள்ளனர். அந்த கும்பலில் நடிகையும் இருந்ததாகக் கூறப்பட்டதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. இது தொடர்பாக மிதுன், அனீஷ், சோனாமோல் ஆகியோர் கைதாகியுள்ளனர்.
ஐடி ஊழியர் கடத்தல் விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகி உள்ளார்.
எர்ணாகுளத்தில் மதுபான விடுதியில் ஒன்றாக மது அருந்தும்போது, ஐடி ஊழியருக்கும், லட்சுமி மேனன் தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனையடுத்து, அந்த ஐடி ஊழியரை காரில் கடத்திச் சென்று, லட்சுமி மேனன் தரப்பு கடுமையாக தாக்கியுள்ளது.
இதுதொடர்பாக, போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில், அவர் தப்பி ஓட்டம்பிடித்துள்ளார்.