1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : நடிகர் வடிவேலுவின் சகோதரர் காலமானார்..!

1

ராசாவின் மனசிலே தேவர் மகன் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம்  திரைத்துறையில் அறிமுகமானவர் வைகைப்புயல் வடிவேலு. இன்று வரை தமிழ் திரைத்துறையின் நகைச்சுவையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது குணச்சித்திர வேடத்தில் இவர் நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

நடிகர் வடிவேலுவிற்கு மூன்று தம்பிகளும் இரண்டு தங்கைகளும் இருக்கிறார்கள். அத்தோடு தன் உடன் பிறந்தவர்கள் அனைவரையும் நன்கு பார்த்துக் கொண்டு அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்தவர் வடிவேல் என்று அவருடைய தம்பி ஜெகதீஸ்வரன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் நடிகர் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நடித்துள்ளார். இரண்டு படங்களில் மட்டுமே நடித்த அவர் பின்னர்  சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. இதைத்தொடர்ந்து அவர் ஜவுளிக்கடை வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் கடந்த சில நாட்களாக கல்லீரல் செயலிழப்பு காரணமாக மதுரை ஐராவதநல்லூரில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.  இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார். நடிகர் வடிவேலுவின் தாயார் சமீபத்தில் மறைந்த நிலையில்,  அவரது சகோதரரும் இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் வடிவேலுவின் தம்பி இழப்புக்கு திரை உலகை சேர்ந்த பலரும்இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவருக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like