#BIG NEWS : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது..!

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் போலீசார் நடத்திய திடீர் சோதனையை அடுத்து, ஸ்ரீகாந்த் காவலில் எடுக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீகாந்த், நண்பன், பருத்திவீரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் கொக்கைன் சப்ளை வழக்கில் கைதான பிரதீப் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருளை சப்ளை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, நடிகர் ஸ்ரீகாந்திடம் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் கொக்கைன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.