#BIG NEWS : நடிகர் ஃபிஷ் வெங்கட் காலமானார்..!
தெலுங்கு திரையுலகின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் வெங்கட்.
மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் தெலுங்கு திரையுலம் இவருக்கு ஃபிஷ் வெங்கட் என்ற அடைமொழியை கொடுத்தது. இவர் 2001-ம் ஆண்டு ‘குஷி’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஃபிஷ் வெங்கட் தனது தனித்துவமான தெலுங்கு வசன உச்சரிப்பு மற்றும் நகைச்சுவைக்காக பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் நடித்த கிங், ஹீரோ, ரெடி, சங்கம் போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதனை தொடர்ந்து மிகவும் பிஸியான காமெடி நடிகராக வலம் வந்த அவர் வருடத்திற்கு 4 முதல் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். கிட்டதட்ட 24 ஆண்டுகளாக தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் இவர் அனைத்து முன்னனி நடிகர்கள் மற்றும் முன்னனி காமெடி நடிர்களுடன் நடித்துள்ளார்.
ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட இவர், கடந்த சில தினங்களாகவே சிறுநீரக பிரச்னையால் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நள்ளிரவில் அவர் உயிர் பிரிந்தது.
53 வயதாகும் நடிகர் பிஷ் வெங்கட் கிட்னி மற்றும் கல்லீரல் செயலிழப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.
உடல்நிலை மோசமான நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.