#BIG NEWS : அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது நடிகர் அஜித்தின் அணி..!
நடிகர் அஜித்தின் அணி 7வது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
துபாயில் நடைபெறும் 24H Dubai 2025 கார் ரேஸில் ஒவ்வொரு அணியில் இருக்கும் 4 பேரும் ஒருவர் மாற்றி, ஒருவர் 24 மணி நேரமும் காரை ஓட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் தன்னுடைய டீமுடன் கார் ரேஸில் இறங்கி,அதற்கான முழு பயிற்சியில் ஈடுபட்டு,இன்று பந்தயத்தில் சீறி பாய்ந்துள்ளார். இன்று மதியம் 1 மணிக்கு தொடங்கிய கார் ரேஸில் அஜித் சுமார் 240 கிலோமீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்பு அஜித்தின் ரேஸிங் கார் பயங்கர விபத்துக்குள்ளானது,அதிலிருந்து எந்த வித காயமுமின்றி மீண்டு வந்த அஜித் இன்றைக்கு நடந்த போட்டியில் தன்னுடைய அணியுடன் மின்னல் வேகத்தில் சென்று 7-வது இடத்தை பிடித்து,அடுத்த சுற்றுக்கு அஜித் ரேஸிங் டீம் தகுதி ஆகியுள்ளது.
இந்த மெகா வெற்றியை உலகம் முழுவதும் இருக்க கூடிய அஜித் ரசிகர்கள் பாட்டாசுகளை போட்டு மேள தாளங்களை வாசித்து சந்தோச வெள்ளத்தில் ஆடி பாடி வருகின்றனர்.