1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : தோட்ட தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி - ராகுல் காந்தி இரங்கல்!

1

வயநாடு மாவட்டத்தில் உள்ள தாளப்புழா கண்ணோட் மலை அருகே தோட்ட தொழிலாளர்களை ஏற்றுக்கொண்டு ஒரு ஜீப் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த ஜீப்பில் 10க்கும் மேற்பட்டோர் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த ஜீப் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் அந்த ஜீப் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அந்த ஜீப்பில் பயணித்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அதில் இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு மானந்தவாடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் வயநாட்டை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், இந்த விபத்து சம்பவத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். வயநாட்டின் மானந்தவாடியில் பல தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த சோகமான ஜீப் விபத்துக்கு ஆழ்ந்த வருத்தம். மாவட்ட அதிகாரிகளிடம் பேசி, விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினே. என் எண்ணங்கள் துயரப்படும் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


 


 

Trending News

Latest News

You May Like