1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வருமான வரி கிடையாது..!!

#BIG NEWS : ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வருமான வரி கிடையாது..!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை.

வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்வு.புதிய வரி சலுகைகள் காரணமாக மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.38 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் நேரடி வரிகளில் அளித்த சலுகை மூலம் ரூ.37,000 கோடியும் மறைமுக வரி சலுகையால் ரூ.1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தங்கம், வெள்ளி, வைரம் மீதான சுங்க வரி அதிகரிப்பு

கூடுதல் வரி விதிப்பு காரணமாக மத்திய அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடி கிடைக்கும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் மீதான சுங்க வரி அதிகரிப்பு.

உதிரிபாகங்களுக்கான சுங்கவரி குறைப்பால், செல்போன் மற்றும் டிவி விலை குறைய வாய்ப்பு உள்ளது. பேட்டரிக்கான சுங்கவரி குறைக்கப்பட்டதால், அந்த வாகனங்களின் விலையும் குறைய வாய்ப்பு இருக்கிறது.

பெண்கள் 7.5 சதவீத வட்டி விகிதத்தில், ரூ.2 லட்சம் வரை சேமிப்பதற்கான புதிய சேமிப்பு திட்டம் கொண்டுவரப்படும் எனவும் நிதியமைச்சர் கூறினார்.

Trending News

Latest News

You May Like