1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS: மும்பை ரயிலில் கூட்ட நெரிசல்: தவறி விழுந்து 5 பேர் பலி..!

Q

மும்பை அடுத்த தானேவில் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் பயணிகள் விழுந்தனர். இந்த விபத்தில் பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர். ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக, தொங்கியபடி பயணம் செய்தவர்கள் தண்டவாளத்தில் கீழே விழுந்து உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் 10க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தில் தவறி விழுந்து காயம் அடைந்து உள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பயணிகள் உயிரிழந்த சம்பவத்தால் உள்ளூர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like