1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : தொடரும் சோகம் : டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு..!

1

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுமித்ரா. இவரது 2 மகள் மற்றும் மகனுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், கடந்த 23ஆம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்ததினர்.

இந்த நிலையில் யோகலட்சுமி மட்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து தற்போது பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து அபிநிதி மற்றும் புருஷோத்தமன் ஆகிய இரண்டு குழந்தைகளும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு ஒரு பெண் குழந்தை உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like