#BIG NEWS: அனந்தபூரில் ₹2000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்..!
அனந்தபூரில் சென்ற நான்கு கண்டெய்னர் லாரிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 2000 கோடி ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
இது குறித்த விசாரணையில் கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு பணம் கொண்டு செல்லப்படுவது தெரியவந்துள்ளது. மேலும், உரிய ஆவணங்களுடன் அனுமதிப் பெற்றுக் கொண்டு செல்லப்படுவது தெரியவந்த நிலையில் லாரிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டன.