#BIG NEWS: 23 வகை நாய்களுக்கு தடை; உத்தரவை வாபஸ் பெற்றது அரசு..!
நாய் வளர்ப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு கடும் கட்டுப்பாடு விதித்தது
23 வகையான நாய் இனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதாவது வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களான, பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் என பொதுவாக அழைக்கப்படும் வகைகள், மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளன.
23 வகை நாய் இனங்கள் மற்றும் அவற்றின் கலப்பினங்களை இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 23 வகை நாய்களுக்கு தடை உத்தரவை வாபஸ் பெற்றது அரசு.
23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை திரும்ப பெற்றது கால்நடை பராமரிப்பு துறை: மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி தடை உத்தரவை தமிழக அரசு அறிவித்திருந்தது; மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதால் தமிழக கால்நடை பராமரிப்பு துறை பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளது