#BIG NEWS : சூட்கேசில் 22 வயது காங்கிரஸ் தொண்டரின் சடலம் கண்டெடுப்பு!

ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற ஹிமானி நர்வால் (22), என்ற பெண்ணின் மரணம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று அக்கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஹரியாணாவின் ரோடாக் மாவட்டத்தில் இன்று சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே சூட்கேஸில் அடைக்கப்பட்ட அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சடலம் அடைக்கப்பட்ட சூட்கேஸை அவ்வழியே நடந்து சென்ற ஒருவர் முதலில் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்தச் சடலம் காங்கிரஸ் தொண்டரான ஹிமானி நர்வால் என்பவருடையது எனத் தெரிய வந்துள்ளது.
சாம்ப்லா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பங்குகொண்டவர் என்றும் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றியவர் என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாரத் பூஷன் தெரிவித்துள்ளார்.