1. Home
  2. விளையாட்டு

#BIG NEWS : இறுதி வரை போராடி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி..!!

#BIG NEWS : இறுதி வரை போராடி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி..!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

டாஸ் என்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான மிச்சல் மார்ஸ் 47 ரன்களும்,டிராவிஸ் ஹெட் 33 ரன்களும் எடுத்து ஒரு நல்ல தொடக்கத்தை தந்தனர். அடுத்து வந்து கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் டக்அவுட் ஆகி வெளியேறினார்.இதன்பின் வந்த வீரர்கள் பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை என்றாலும் கணிசமான பங்களிப்பை தந்தனர்.விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.ஆஸ்திரேலிய அணி 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா மூன்று விவரிகளை கைப்பற்றினார்.

270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 30 ரன்களிலும்,கில் 37 ரன்களிலும் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார்.அணியின் எண்ணிக்கை 185 எட்டும் பொழுது கோலி 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் முதல் வந்திலேயே டக் அவுட் ஆனார்.சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடரின் 3 போட்டியிலும் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் நன்றாக அடி வந்த ஹர்திக் பாண்டியாவை 40 ரன்னிலும் , ஜடேஜாவை 18 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற்றி ஆட்டத்தை ஆஸ்திரேலியாவின் பக்கம் கொண்டு சென்றார் ஆடம் ஜாம்பா.இந்திய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரை 2 - 1 கைப்பற்றியது.

Trending News

Latest News

You May Like