1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : ஒரு நாளில் எத்தனை 2000 நோட்டுக்களை மாற்றலாம்..?

#BIG NEWS : ஒரு நாளில் எத்தனை 2000 நோட்டுக்களை மாற்றலாம்..?

ரிசர்வ் வங்கி முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவத 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்று அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, வரும் செப்டம்பர் மாதம் வரை வங்கிகளில் டெபாசிட் செய்து 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

தற்போது 2000 நோட்டுக்களின் புழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. ஆனாலும் சுமார் 3,5 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்கின்றன. 2000 ரூபாய் நோட்டுக்களை விட தற்போது 500 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளே அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றன. ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகளை பார்ப்தே அரிதாகிவிட்டது.

2000 ரூபாய் நோட்டுக்கள் தற்போதைய நிலையில் செல்லும் எனவே பயப்படத்தேவையில்லை. எனினும் வங்கியில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து 500 ரூபாய் அல்லது வேறு நோட்டுக்களை வாங்கி கொள்ளலாம்.அதேநேரம் ரொக்க எக்ஸேன்ஞ் என்பது இப்போதைய நிலையில் ₹2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் 10 நோட்டுகள் அதாவது ₹20,000/- வரை கொடுத்து ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம்.


Trending News

Latest News

You May Like