#BIG NEWS : 2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள பான் கார்டு கட்டாயம் ?
கடந்த 2016- ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்திருந்தது. மக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.
இதற்கான படிவத்தையும் வெளியிட்டது. அதன்படி, இன்று முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். அதற்குரிய படிவத்தை நிரப்பிக் கொடுத்து ஒரு நாளில் ரூபாய் 20,000 அளவுக்கு ரூபாய் 2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும்.
வரும் செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதால், 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரம் காட்ட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு பிறகு முதல் முறையாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது, வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தால், வருமானவரி தேவைக்காக 'பான்' எண்ணை குறிப்பிடுவது நடைமுறையில் இருக்கிறது. 2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்வதற்கும் அது பொருந்தும் என தெரிவித்தார்.