#BIG NEWS : கேரளாவில் அரசு பேருந்து ஆற்றில் கவிழ்த்த விபத்தில் 2 பேர் பலி..! பலர் படுகாயம்..!
கோழிக்கோடில் அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.
அனக்கம் பொயிலில் இருந்து திருவம்பாடி நோக்கி 50 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை உடைத்துக் கொண்டு தலைகீழாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் கமலா மற்றும் ராஜேஸ்வரி என்ற பெண்கள் உயிரிழந த நிலையில், 27 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
8 பேர் ஓமச்சேரி சாந்தி மருத்துவமனையிலும், 15 பேர் லிசி மருத்துவமனையிலும், 2 பேர் கேஎம்சிடி மருத்துவக் கல்லூரியிலும், மேலும் இருவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி ஆற்றில் கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.