#BIG NEWS : 1992-ல் நடந்த வாச்சாத்தி வன்கொடுமை : தண்டனையை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம்..!

சந்தன கடத்தல் வீரப்பன் நடமாடி வந்த வாச்சாத்தி மலைக் கிராமத்தில் 1992- ஆம் ஆண்டு தமிழக வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் கிராம மக்களை அடித்ததுடன், 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில் மொத்தம் 269 நபர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு 19 ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த காலகட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்களில் 54 நபர்கள் உயிரிழந்துவிட்டதால், மீதமுள்ள 215 நபர்களும் குற்றவாளிகள் என 2011- ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இதில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வேல்முருகன், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இதற்கிடையே வழக்கை விசாரித்த வேல்முருகன், கடந்த மார்ச் 4- ஆம் தேதி வாச்சாத்தி கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ₹10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்க்கு இழப்பீரு வழங்க வேண்டும்.. குற்றம் புரிந்தவர்களிடம் ₹5 லட்சம் வசூலிக்க வேண்டும். அப்போதைய எஸ்.பி, மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட அல்லது அவர்களது குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில், உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என கடந்த 2011ம் ஆண்டு தருமபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.