#BIG NEWS : வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக ஊழல் அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்படும்..!!
மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் என்னை போல் தாக்கப்பட்ட தலைவர்கள் சரித்திரத்தில் யாரும் இல்லை. என் அரசியல் இப்படி தான் இருக்கும்.! வேண்டாம் என்றால் என்னை ஒதுக்கிவிட்டு அரசியல் நடத்துங்கள். இன்னைக்கு திமுக பத்திரிகை திறந்து பார்த்தால் கண்டிப்பாக நான் இருப்பேன். இவ்வளவு நாட்களாக போலீசார் நடுநிலையாக இருந்தார்கள் தற்போது அவர்கள் பக்கம் சாய்ந்து விடுவார்கள். இதெல்லாம் டிரைலர் தான் இன்னும் மோசமாக எழுதுவார்கள். எம்எல்ஏ, எம்பி, சிஎம் என பதவிக்காக நான் வரவில்லை பாஜக ஆட்சி கட்டிலில் ஏற வேண்டும் அதற்காக தான் வந்துள்ளேன். தமிழை முதன்மைப்படுத்தி தான் தமிழகத்தில் அரசியல் நடத்த வேண்டும். புதுவித அரசியல் கொண்டு வருவதற்கு பாஜகவால் மட்டும் தான் முடியும்.
தமிழகத்தில் ஒரு காலத்தில் வல்லுனர்கள் கருத்து சொல்லும் நிலை இருந்தது. ஆனால் இன்று கருத்து கந்தசாமிகளாக உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் பேசுகிறார்கள்.இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் 'நீட்' பற்றி பேசுகிறார். அவருக்கு நீட் பார் முலாவை சரி செய்யத் தெரியுமா? கேட்டால் அண்ணா பல்கலைக்கழக செனட் மெம்பர் என்கிறார்.
உதயநிதி ஸ்டாலினை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் தகுதி என்ன? படிப்பு என்ன? அவர் எங்கு போய் என்ன கஷ்டப்பட்டார்? அவர் யாரிடம் போய் என்ன பேசினார். மக்கள் அவரது திறமைக்கு ஓட்டு போட்டார்களா? சேப்பாக்கம் தொகுதி என்பது தொடர்ந்து தி.மு.க. வெற்றி பெறும் தொகுதி. யாரை நிறுத்தினாலும் தி.மு.க. வெற்றி பெறக்கூடிய தொகுதி அது.
பி.ஜே.பி.யை 420 கட்சி கூறுவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது. நான் திரும்ப பதில் சொன்னால் அது வேற மாதிரி ஆகிவிடும். அது நன்றாக இருக்காது. முதலில் யார் 420 என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏப்ரல் 14ஆம் தேதி நான் சொன்னபடி தமிழக ஊழல் பட்டியல் ரிலீஸ் செய்யப்படும். தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். வாட்ச் பில்லில் இருந்து எல்லாம் எனக்கு வரும். நான் சொன்ன கணக்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் சொல்லி உள்ளேன். ஒவ்வொரு அமைச்சர் பெயரிலும் சொத்து எங்கெங்கு உள்ளது என்ற பட்டியல் விவரமாக வெளியிடப்படும். நீங்கள் ரொம்ப ஆச்சரியப்படுவீர்கள். அவர்களது முதலீடு பிசினஸ், மால், துபாயில் இன்ப்ரா அனைத்தும் அதில் தெரியவரும்.அன்றைக்கு நீங்கள் கேள்வி கேளுங்கள் 420 யார் என்று பேசிக் கொள்ளலாம்.