1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறாரா ஈவிகேஎஸ் இளைய மகன்..?

#BIG NEWS : ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறாரா ஈவிகேஎஸ் இளைய மகன்..?

ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கும் திமுகவிற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ள கூட்டணி கட்சிகளுக்கும் நன்றிகள். நேற்று முதலே தேர்தல் பிரசார வேலைகளை திமுக தொடங்கியிருக்கிறது.

இதற்காக காங்கிரஸ் கட்சிக்காரன் என்ற அடிப்படையில் முதல்வருக்கும் திமுகவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் கட்சி மேலிடம் அறிவிக்கும் என்று நினைக்கிறேன். இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கட்சி மேலிடத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன். நான் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளேன்" என்றார்.

Trending News

Latest News

You May Like