#BIG NEWS : 100 பேர் பலி... ரசிகர்களிடையே கலவரம்..!
மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவின் 2வது பெரிய நகரம் என்சரிகோர். இங்கு நேற்று (டிச.1) உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றது. இதனை ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் ஒன்றுக்கூடி கண்டுகளித்தனர். போட்டியில் நடுவர் தவறான தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பு ரசிகர்கள் ஆவேசத்தில் ஆர்பரித்ததுடன், கால்பந்து மைதானத்திற்குள் நுழைந்தனர். இதனைக் கண்ட எதிர் தரப்பு ரசிகர்களும் மைதானத்திற்குள் புகுந்தனர். இதனால் இரு தரப்பு ரசிகர்களும் பலமாக மோதிக்கொண்டனர்
இந்த மோதல் கலவரமாக மாறியது. மைதானத்திற்குள் வெளியேயும், சாலைகளிலும் சண்டையிட்டுக்கொண்ட ரசிகர்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். மைதானம் அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களின் சடலங்கள் தெருக்களில் சிதறிக் கிடந்தன. போட்டியின் நடுவே நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவால் மோதல் தொடங்கியது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மைதானத்திற்குள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.