#BIG NEWS : தமிழ்நாட்டில் 01-03-2027 மக்கள் தொகை + ஜாதிவாரி கணக்கெடுப்பு..!
'சென்சஸ்' எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, 2021ல் நடக்க வேண்டிய சென்சஸ் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது 2027 மார்ச் 1ஐ அடிப்படை தேதியாக வைத்து, சென்சஸ் பணிகள் துவங்கவுள்ளன.
இதில், ஜாதிவாரி கணகெடுப்பும் நடத்தப்படும். இதற்கான அரசாணை இன்று வெளியாகவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று ஆய்வு நடத்தினார். டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி, 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ல் நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பாக இன்று (ஜூன் 16) வெளியான செய்திக்குறிப்பில், 'முதல்கட்டமாக லடாக், காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் 2026, அக்.1ம் தேதி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். அடுத்தகட்டமாக, நாட்டின் ஏனைய பகுதிகளில் 2027, மார்ச் 1ம் தேதி கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.