1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : ட்விட்டர் நிறுவனத்தை விற்க போகிறாரா எலான் மஸ்க்..?

#BIG NEWS : ட்விட்டர் நிறுவனத்தை விற்க போகிறாரா எலான் மஸ்க்..?

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.

அதன்படி தனிநபர் அதிகாரப்பூர்வ கணக்குக்கு நீள நிறமும், வணிக கணக்குகளுக்கு தங்க நிறமும், அரசு சார்ந்த கணக்குகளுக்கு க்ரே நிறமும் என டிக்குகள் மாற்றப்பட்டது. இதன் பின்னர் சந்தா செலுத்தி பல்வேறு வசதிகள் மற்றும் அம்சங்களுடன் கூடிய ட்விட்டர் ப்ளூ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

சமீபத்தில், ட்விட்டர் லோகோவான, நீலநிற குருவியை மாற்றி, ஜப்பானின் முக்கிய நாய் இனமான ‘ஷிபு’ என்ற நாயின் புகைப்படத்தை புதிய லோகோவாக வைத்தார். பின்னர் அந்த லோகோ மாற்றப்பட்டு, மீண்டும் நீலநிற குருவியே வைக்கப்பட்டது.


#BIG NEWS : ட்விட்டர் நிறுவனத்தை விற்க போகிறாரா எலான் மஸ்க்..?

இந்த நிலையில் பிபிசிக்கு பேட்டியளித்த எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது குறித்தும், அதை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ட்விட்டரை சொந்தமாக வைத்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. அதனை நிர்வகிப்பது ரோலர் கோஸ்டரில் பயணிப்பது போன்று உள்ளது.

ட்விட்டரை வாங்கியது ஒரு சரியான முடிவு என்று கருதினாலும், கடந்த பல மாதங்களாக நான் மிகவும் அழுத்தமாக உணர்கிறேன். பணிச்சுமையால் நான் சில நேரங்களில் அலுவலகத்தில் தூங்குகிறேன். சரியான நபரைக் கண்டுபிடித்தால் அவரிடம் ட்விட்டர் நிறுவனத்தை விற்பேன் என்று அவர் கூறினார்.

இதனிடையே அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள ட்விட்டர் பெயர்ப் பலகையில் 'டபிள்யூ' எழுத்தை மறைத்துள்ளார். இதனால், அது டிட்டர் என்று காட்சி அளிக்கிறது.


#BIG NEWS : ட்விட்டர் நிறுவனத்தை விற்க போகிறாரா எலான் மஸ்க்..?



Trending News

Latest News

You May Like