1. Home
  2. சினிமா

#BIG NEWS : காந்தாரா நடிகருக்கு தாதா பால்கே விருது அறிவிப்பு..!!

#BIG NEWS : காந்தாரா நடிகருக்கு தாதா பால்கே விருது அறிவிப்பு..!!

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் ‘காந்தாரா’. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படம் வெளியானது. இந்த படம் கன்னடத்தில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசானது. வெறும் 16 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் கன்னடத்தை போன்று மற்ற மொழிகளில் சூப்பர் ஹிட்டடித்து சுமார் 400 கோடி வசூலை குவித்தது.


#BIG NEWS : காந்தாரா நடிகருக்கு தாதா பால்கே விருது அறிவிப்பு..!!

இந்த படத்தின் வெற்றிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்தன. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என கேள்வி எழுந்தது. இதற்கு நிச்சயம் உருவாகும் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர் பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023 ஆம் ஆண்டிற்கான ‘தாதா சாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Trending News

Latest News

You May Like