1. Home
  2. விளையாட்டு

#BIG NEWS : நிலநடுக்கத்தில் காணாமல் போனதாக நினைத்த பிரபல கால்பந்து வீரர் உயிருடன் மீட்பு ..!!

#BIG NEWS : நிலநடுக்கத்தில் காணாமல் போனதாக நினைத்த பிரபல கால்பந்து வீரர் உயிருடன் மீட்பு ..!!

சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரம் காசியான்டெப்பில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவானது. மேலும் இது பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

முதலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 20 முறை கடுமையான நில அதிர்வுகள் ஏற்பட்டன.காசியான்டெப் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் துருக்கி முழுவதிலும் கடுமையாக உணரப்பட்டது. நிலநடுக்கத்தின்போது துருக்கியின் பல பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு சரிவது போல நொடிப்பொழுதில் இடிந்து தரைமட்டமாகின. 1,500-க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை சுமார் 4300க்கும் அதிமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

#BIG NEWS : நிலநடுக்கத்தில் காணாமல் போனதாக நினைத்த பிரபல கால்பந்து வீரர் உயிருடன் மீட்பு ..!!

மேலும், பிரபல கால்பந்து கிளப் அணிகளான செல்சியா எப்.சி மற்றும் நியூகேஸ்டில் எப்.சி அணிகளின் முன்னாள் முன்னணி வீரர் கானாவை சேர்ந்த கிறிஸ்டியன் அட்சு மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிளம் இயக்குநர் டானர் சவூத்தையும் காணவில்லை என ஹடேஸ்போர் கிளப்பின் செய்தி தொடரபாளர் முஸ்தபா ஓசத் தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் இருவரையும் தொடர்பு கொள்ள முடியாததால் இவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது என்றார்.

இந்நிலையில், கானாவை சேர்ந்த கிறிஸ்டியன் அட்சு,இடிபாடுகளுக்குள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இவரை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார். அவருக்கு காலில் பலத்த அடி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது




Trending News

Latest News

You May Like